சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது சமந்தாவுக்கும் ஏற்பட்டுள்ளது.
சமந்தா தமிழில் அவ்வப்போது நடித்து வந்தாலும் இன்னும் பெரிய நடிகை என்ற அளவுக்கு வரவில்லை.
ஆனால் தெலுங்கிலோ முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் சமந்தா தமிழிலும் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தீயா வேலை செய்யணும் குமாரு
சமந்தா தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்தார். இப்படி கெஸ்ட் ரோலில் நடித்ததால் தற்போது அவர் தலையில் கையை வைத்து உட்கார்ந்துள்ளார்.
குவியும் வாய்ப்பு
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்தது போன்று எங்கள் படத்திலும் வாருங்கள் என்று தமிழ் இயக்குனர்கள் சமந்தாவை கேட்கிறார்களாம்.
இனி கெஸ்ட்
ரோலே கிடையாது தமிழில் பெரிய இடத்தை பிடிக்க நினைக்கையில் இப்படி கெஸ்ட் ரோல் வாய்ப்பாக வருகிறதே என்று நொந்து போயுள்ளார் சமந்தா. அதனால் இனி கெஸ்ட் ரோலில் நடிப்பது இல்லை என்று அறிவித்துள்ளார்.
நயனுக்கு வந்த பிரச்சனை
நயன் நண்பன் தனுஷுக்காக எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். இதையடுத்து அவரை இயக்குனர் குத்துப்பாட்டுக்கு ஆட வருமாறு அழைப்பு விடுத்ததால் டென்ஷனாகிவிட்டார்.
No comments:
Post a Comment