Monday, 15 July 2013

தமிழ் சினிமா ஆரோக்கியமாக வளர பெண்கள் சினிமாவுக்குள் நுழைய வேண்டும்: கௌதம் வாசுதேவ் மேனன்


வாரணம் ஆயிரம்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்த சதீஷ், நாயகனாக நடித்து வரும் படம் ‘என்றென்றும்’. இப்படத்தை சினிஸ் இயக்குகிறார். இவரே தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். நாயகியாக பிரியங்கா ரெட்டி நடித்துள்ளார்.

தமிழ் சினிமா ஆரோக்கியமாக வளர பெண்கள் சினிமாவுக்குள் நுழைய வேண்டும்: கௌதம் வாசுதேவ் மேனன்
இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் பி.எல்.தேனப்பன், பின்னணி பாடகர் நிகில் மேத்யூ, நடிகர் திலீப் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் ஆடியோவை கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட பி.எல்.தேனப்பன் பெற்றுக் கொண்டார்.

கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, இப்படத்தின் நாயகனான சதீஷ் திறமையான நடிகர். நான் இயக்கவிருந்த ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படம் ஏதோ சில காரணங்களால் கைவிடப்பட்டது. அந்த படத்தில் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படம் கைவிடப்பட்டபோது அவர் எந்த அளவிற்கு வேதனையடைந்தாரோ, அந்த அளவுக்கு நானும் வேதனையடைந்தேன். தமிழ் சினிமாவிற்கு தற்போது புதிய இளம் நடிகர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். முக்கியமாக பெண்கள் தமிழ் சினிமாவுக்கு வர முன்வரவேண்டும். அப்பொழுதுதான் சினிமா உலகம் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் புதிய இயக்குனர்களும் தமிழ் சினிமாவிற்கு வரவேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment