Tuesday, 16 July 2013

தலைப்பில் என் பெயரும் வேண்டாம், பில்டப்பும் வேண்டாம்: அஜீத் அதிரடி உத்தரவு

சென்னை: அஜீத் குமார் தனது படத் தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு தெரிவித்துள்ளார். 

அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 


ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர். இந்நிலையில் அஜீத் படத்திற்கு புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பறவை 


அஜீத் படத்தின் தலைப்பு வலை இல்லை பறவை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தலைப்பையும் யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை.

சீக்கிரமாக தலைப்பை சொல்லுங்க 

விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை. தலைப்பை அறிவிப்பேனா என்று அடம்பிடிக்கிறார்களே.

பில்டப் வேண்டாம் 

தனது கதாபாத்திரத்தின் பெயரையோ அல்லது பில்டப் கொடுக்கும் தலைப்பையோ தனது படத்தின் தலைப்பாக வைக்கவே கூடாது என்று அஜீத் குமார் இயக்குனர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.

நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரும் வழக்கு வாபஸ்


நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரும் வழக்கு வாபஸ்
நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை மனுதாரரே வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அதை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த எஸ்.பாரதிதேவி (வயது 42) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அஞ்சலி என்கிற பாலா என்கிற திரிபுரசுந்தரி (வயது 27), எனது சகோதரி பார்வதிதேவியின் மகள். அஞ்சலியை நான் தத்து மகளாக எடுத்துக்கொண்டேன். இதற்கான நடைமுறைகளை கோடம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்திருக்கிறேன்.
அஞ்சலி நடிகையாக இருக்கிறாள். சத்தமின்றி முத்தமிடு என்ற படம் அஞ்சலியின் முதல் சினிமாவாகும். இதன்பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் அஞ்சலி நடித்து வந்தார். தற்போது பலுப்பு என்ற தெலுங்கு படத்தில் அவர் நடிக்கிறார். இதற்காக அவர் கடந்த மார்ச் 31-ந்தேதி எனது கணவருடன் ஐதராபாத் சென்றிருந்தார். 

அங்கு தாஸ் பல்லவா என்ற ஓட்டலில் இரண்டு பேரும் அறை எடுத்துத் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி காலையில் என் கணவர் கண்விழித்து பார்த்தபோது, அஞ்சலியைக் காணவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

நான் வளசரவாக்கம் போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் ஏப்ரல் 10-ந்தேதி புகார் கொடுத்தேன். இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சலியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன். அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அஞ்சலி தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், வக்கீல் முகுந்தன் ஆஜரானார்கள். அரசுத்தரப்பில் வக்கீல் தம்பிதுரை ஆஜரானார்.

ஏற்கனவே பெங்களூரில் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே அவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூற முடியாது என்று தம்பிதுரை வாதிட்டார். 

அஞ்சலி தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், "அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இங்கு வழங்கு தாக்கல் செய்துவிட்டு, அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மற்றொரு மனுவை வேறு கோர்ட்டில் பாரதிதேவி தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்க முடியாது" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு தவறான மனுவாக இருந்துவிடக்கூடாது என்று கருத்து கூறினர். அதைத் தொடர்ந்து அந்த ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக பாரதிதேவி தரப்பில் கூறப்பட்டது. எனவே மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விஜய்யுடன் காமெடியில் இணையும் வித்யு ராமன்


விஜய்யுடன் காமெடியில் இணையும் வித்யு ராமன்
நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்திருப்பவர் வித்யு ராமன். இவர் அப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திலும் சந்தானத்தின் காதலியாக நடித்து காமெடியில் ரசிக்க வைத்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஜில்லா’ படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்திலும் வித்யு ராமன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியுடன் நடிக்க ஆசை: பிரியாமணி


ரஜினியுடன் நடிக்க ஆசை: பிரியாமணி
பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்தி படத்தில் ஒருபாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார்.

பிரியாமணி கன்னடத்தில் நடித்த சாருலதா படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் கடைசியாக நடித்த படம் இதுதான்.

ஹன்சிகா, டாப்சி, சமந்தா போன்றோர் வருகையால் பிரியாமணிக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. கார்த்தி, விஷால், தனுஷ் போன்றோருடன் ஜோடி சேர்ந்துள்ள இவர், ரஜினியுடனும் நடிக்க ஆசை உள்ளதாம்.

இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:–

சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. கமலஹாசனுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நான் ஷாருக்கான் ரசிகை. சிறு வயதில் அவரது படங்களை பார்த்து வளர்ந்தேன். எனவேதான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட அழைத்ததும் ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.

சிம்புவுடன் காதல் இல்லை: ஹன்சிகா


சிம்புவுடன் காதல் இல்லை: ஹன்சிகா

ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன.
இருவரும் வேட்டை, மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரிடம் இதுகுறித்து கேட்டபோது ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்து கொள்ள விரும்புகினால் எதிர்க்கமாட்டேன் என கூறி இருந்தார். 

இந்த செய்தியை தெலுங்கு டி.வி.சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின.
இதையடுத்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். ஐதராபாத்தில் அவர் ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–

சிம்புவுன் நானும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகளால் நான் வருத்தம் அடைந்துள்ளேன். எங்களுக்குள் காதல் இல்லை. நண்பர்களாத்தான் பழகுகிறோம்.
இரண்டு படங்களில் சேர்ந்து நடித்ததால் காதல் என்று வதந்தி பரப்பி உள்ளனர். 

என்னுடன் நடித்த மற்ற கதாநாயகர்களுடன் நான் எப்படி பழகுகிறோனோ. அப்படித்தான் சிம்புடனும் பழங்குகிறேன்.

சிம்புவை மணக்கப்போவதாக வெளியான செய்தியால் என்னை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கவலை அடைந்துள்ளனர். நான் இப்போது திருமணம் செய்து கொள்ளமாட்டேன். அதற்கு நிறைய காலம் இருக்கிறது.
எனது திருமணம் குடும்பத்தினர் விருப்பப் படித்தான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன்.

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

தமிழில் ஹன்சிகா நம்பர் ஒன் நடிகையாகி உள்ளார். நிறைய படங்கள் குவிகிறது. சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான சிங்கம்–2, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள் ஹிட்டாகியுள்ளன.

விஜய்யின் தலைவா எப்போது ரிலீஸ்?


விஜய்யின் தலைவா எப்போது ரிலீஸ்?

விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ரிலீஸ் தேதி மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. 

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் ரம்ஜான் ஸ்பெஷலாக படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்க சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ள படம் தலைவா. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. 

ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியவில்லை. 

டால்பி அட்மாஸ் தொழில்நுட்பப் பணிகள் இரப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும், சென்சார் சான்று பெற வேண்டியிருப்பதாலும் மேலும் ஒரு வாரம் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளதாக இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிதாக விளம்பரமில்லாமல் ரிலீசாகும் தனுஷின் மரியான்!


பெரிதாக விளம்பரமில்லாமல் ரிலீசாகும் தனுஷின் மரியான்!

இந்த மாதம் வெளியாகவிருக்கிற முக்கிய படங்களுள் ஒன்று தனுஷின் மரியான். 

இந்த மாதத்தின் முதல்வாரத்தில் வெளியான சிங்கம் 2 பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியின் காரணமாக, தொடர்ந்து வெளியாக வேண்டிய சில படங்கள் தள்ளிப் போய்விட்டன. 

எனவே இந்த வாரம் முழுவதும் எந்த போட்டியும் இல்லாமல் கல்லா கட்டிக் கொண்டிருக்கப் போகிறது சிங்கம் 2. இதற்கிடையில் இந்த வாரமா அடுத்த வாரமா என ஊசலாடிக் கொண்டிருந்த தனுஷின் மரியான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. 

வரும் ஜூலை 19.. அதாவது இந்த வெள்ளிக் கிழமை மரியான் உலகமெங்கும் வெளியாகவது தியேட்டர் லிஸ்டுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "மரியான் படம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. 

ஆனால் மிக அருமையான விஷுவல்ஸுக்கு உத்தரவாதம் தருவேன். ரசிகர்களுக்கு மிகவும் புதிய அனுபவமாக இந்தப் படம் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னும் மூன்று தினங்களில் 


வெளியாகவிருக்கும் படத்துக்கு பெரிதாக எந்த விளம்பரமும் இல்லாதது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Monday, 15 July 2013

ஏய் இரண்டாம் பாகம்: நான்கு வேடங்களில் சரத்குமார்?


ஏய் இரண்டாம் பாகம்: நான்கு வேடங்களில் சரத்குமார்?

சரத்குமார் - நமீதா நடித்து சூப்பர் ஹிட்டான ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ். இந்தக் கதையில் சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நமீதாவின் கவர்ச்சி ப்ளஸ் காமெடி, வடிவேலுவின் வெடிச் சிரிப்பு மற்றும் சரத்குமாரின் ஆக்ஷன் போன்றவற்றால் இன்றும் பார்க்கப் பார்க்க திகட்டாத பொழுதுபோக்குப் படமாகத் திகழ்கிறது ஏய். சிங்கம் 2 படத்தின் வெற்றி, இப்போது ஏய் படத்துக்கும் இரண்டாம் பாகத்தை உருவாக்கத் தூண்டியுள்ளது. 

அதற்கான பக்கா ஸ்க்ரிப்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ். 

இந்தப் படத்தில் சரத்குமாரை நான்கு வேடங்களில் நடிக்க வைக்க இயக்குநர் வெங்கடேஷ் முயற்சித்து வருகிறார். நமீதா, வடிவேலு ஆகியோரையும் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் இரண்டு கதாநாயகிகளும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். 
சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பது உண்மையா என இயக்குநர் வெங்கடேஷிடம் கேட்டபோது, 'அதற்குத்தான் முயற்சி செய்து வருகிறோம். அவர் தேதிகளைப் பொறுத்துதான் எல்லாமே," என்றார். 

சூர்யா கொடுத்த பார்ட்டியில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஆட்டம்


சூர்யா கொடுத்த பார்ட்டியில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஆட்டம்

சென்னை: சிங்கம் 2 வெற்றியைக் கொண்டாட சூர்யா கொடுத்த பார்ட்டியில் அனுஷ்கா ஆர்யாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம். 

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானத்தை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் 2 வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வெற்றியை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சூர்யா பார்ட்டி கொடுத்தார். 

பார்ட்டிக்கு பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பார்ட்டிக்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர்கள் லிங்குசாமி, கௌதம் மேனன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் பிரபு, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, 
ஜீவா ஆகியோர் வந்திருந்தனர். 

இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள அனுஷ்கா ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு துவங்கிய பார்ட்டி மறுநாள் காலை வரை நடந்துள்ளது. பார்ட்டி துவங்கியதில் இருந்து முடியும் வரை அனுஷ்கா ஆர்யாவின் கையை பிடித்துக் கொண்டே சுற்றினாராம். 

மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து அதிர வைக்கும் ஆட்டமும் போட்டாராம். அவர்களுடன் சேர்ந்து லிங்குசாமியும் டான்ஸ் ஆடினாராம். இந்த ஆர்யாவை புரிந்துகொள்ளவே முடியவில்லையே!

நயன்தாராவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது சமந்தாவுக்கு



சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது சமந்தாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

சமந்தா தமிழில் அவ்வப்போது நடித்து வந்தாலும் இன்னும் பெரிய நடிகை என்ற அளவுக்கு வரவில்லை. 

ஆனால் தெலுங்கிலோ முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் சமந்தா தமிழிலும் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். 


இந்நிலையில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

தீயா வேலை செய்யணும் குமாரு 


சமந்தா தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்தார். இப்படி கெஸ்ட் ரோலில் நடித்ததால் தற்போது அவர் தலையில் கையை வைத்து உட்கார்ந்துள்ளார்.

குவியும் வாய்ப்பு 


தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்தது போன்று எங்கள் படத்திலும் வாருங்கள் என்று தமிழ் இயக்குனர்கள் சமந்தாவை கேட்கிறார்களாம்.

இனி கெஸ்ட் 



ரோலே கிடையாது தமிழில் பெரிய இடத்தை பிடிக்க நினைக்கையில் இப்படி கெஸ்ட் ரோல் வாய்ப்பாக வருகிறதே என்று நொந்து போயுள்ளார் சமந்தா. அதனால் இனி கெஸ்ட் ரோலில் நடிப்பது இல்லை என்று அறிவித்துள்ளார்.


நயனுக்கு வந்த பிரச்சனை 

நயன் நண்பன் தனுஷுக்காக எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். இதையடுத்து அவரை இயக்குனர் குத்துப்பாட்டுக்கு ஆட வருமாறு அழைப்பு விடுத்ததால் டென்ஷனாகிவிட்டார்.

சமூக அக்கறையை படம்பிடித்து காட்டும் ‘கன்னி வெடி’: கதாநாயகி அறிமுக விழாவில் செல்வமணி பேச்சு


சமூக அக்கறையை படம்பிடித்து காட்டும் ‘கன்னி வெடி’: கதாநாயகி அறிமுக விழாவில் செல்வமணி பேச்சு
தமிழில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இப்போது குறைந்த பட்ஜெட்டில் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் கன்னிவெடி என்ற படத்தை இயக்கி வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த ஹூடாஷா என்பவர்தான் கதாநாயகி. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு இப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார் செல்வமணி. சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சி அளித்து நாயகிக்கு மெருகேற்றியிருக்கிறார். அவருடன் ஒரு குழந்தை நட்சத்திரத்தையும் வைத்துதான் கதை பின்னப்பட்டிருக்கிறது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் கதாநாயகி அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குநர் சங்க தலைவர் விக்கிரமன், இயக்குனர் சேகர் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் கதாநாயகியை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, கன்னி வெடி படத்தின் கதைக்கரு உருவான விதம் பற்றி விளக்கினார்.

“நம் நாட்டின் பண மதிப்பு மற்ற நாடுகளின் பண மதிப்பை விட மிகவும் குறைந்திருக்கிறது. ஒரு டாலருக்கு நாம் 60 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. நம் நாட்டில் மனித வளம் நிறைய இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு பொருளாதாரத்தில் நாம் வளரவில்லை. இதனால் நீண்ட காலமாக எனக்கு ஒரு வருத்தம் இருந்தது. 

எனவே, பொருளாதாரம் உள்ளிட்ட சமூக அக்கறையுள்ள கருத்துக்களை மையமாக வைத்து படம் பண்ண வேண்டும் என்று விரும்பினேன். அதன் வெளிப்பாடாகத்தான் இந்த ‘கன்னிவெடி’ உருவாகியிருக்கிறது. சமூக நோக்கோடு கருத்து சொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம், நிச்சயம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி இருக்கும்” என்றார் செல்வமணி.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: அமிதாப், ஷாருக்கானுக்கு அழைப்பு


இந்திய சினிமா நூற்றாண்டு விழா: அமிதாப், ஷாருக்கானுக்கு அழைப்பு
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மும்பை ஹிந்திப் படவுலகின் நாயகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர். 

அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் எங்களது விருந்தினர் பட்டியலில் உள்ளனர். இருவரையும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஒத்துழைப்பு அளிக்கும்படிக் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களும் இதற்கு நேரம் ஒதுக்கி வருவார்கள் என்று நம்புகின்றோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக கழகத்தின் தலைவர் சி.கல்யாண் தெரிவித்துள்ளார்.  

நேரு உள்அரங்கில், மூன்று நாள் நிகழ்ச்சிகளாக நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படத் துறையினர் பங்கு பெறுவர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

முதல் நாள் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் மலையாளத்துறைக்கு ஒதுக்கப்படுகின்றது. இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் தெலுங்கு, கன்னடத்  திரைத்துறையினருக்கு ஒதுக்கப்படும். மூன்றாவது நாள் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களின் தபால்தலைகள் வெளியிடப்படும் என்று கல்யாண் கூறினார்.  

பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந்நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கின்றார்கள். இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டினை சிறப்பிக்கும் விதத்தில் ஒரு பாடலை இசையமைக்கச் சொல்லி இருவரையும் கேட்டுள்ளோம். இதுகுறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆயினும், விரைவில் அந்தப் பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்தப் பாடல் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அரங்கத்தில் நிகழ்த்தப்படும் என்றும் கல்யாண் தெரிவித்தார்.

Big B, SRK invited for centenary celebrations in Chennai

Bollywood luminaries such as Amitabh Bachchan and Shah Rukh Khan are on the guest list for celebration of Indian cinema's 100 years to be held here Sep 1-3.

"Shah Rukh and Amitabh-ji are on our guest list. We have requested them to lend their support in our celebration. We are hoping that they will take out time and join us," C. Kalyan, president of The South Indian Film Chamber of Commerce (SIFCC), told IANS.

The three-day event, which will bring together all the four south Indian film industries - Tamil, Telugu, Kannada and Malayalam - will be held at the Nehru Indoor Stadium.

The chief ministers of all the four states - Tamil Nadu, Kerala, Karnataka and Andhra Pradesh - are expected to attend the event.
Read Story: Centenary Film Festival to open in New Delhi

While the first day of the event is dedicated to the celebrations of Tamil and Malayalam industries, the second day is dedicated to Telugu and Kannada industries.

On the third and final day of event, Kalyan said, "Besides performances from all the four industries, we also plan to release 50 stamps to felicitate famous personalities from each industry."

Musicians Illayaraja or A.R. Rahman are likely to compose a special song for the event.

"We have requested these musicians to compose a special song to commemorate 100 years of Indian cinema. They haven't confirmed yet for the song, but we hope to hear from them soon. This song is expected to be performed on the final day of the event," said Kalyan.

Ranbir Kapoor and Katrina Kaif's love saga


First meeting
Much before Ranbir and Katrina were cast opposite each other in Ajab Prem Ki Ghazab Kahani (2009) , it was Deepika Padukone who first introduced Katrina to Ranbir. Deepika had taken her then boyfriend to Katrina's birthday bash. Sources say it was the same party where Shah Rukh Khan and Salman Khan had their infamous brawl on July 16, 2008. Possibly true because Katrina refrained from having a birthday party in the following years as it reminded her of the ugly fight between SRK and Salman.

Cool camaraderie
It was noted that when Ranbir and Katrina made their first public appearance together to promote Raajneeti at a media event in 2010, Katrina behaved like a giggly school girl on his arm. In an interaction that followed, she even went on saying, "Just because I've acted with Akshay and Salman doesn't make me older... I'm younger than Ranbir..." Now, we know.

Going to Ibiza
Both Ranbir and Katrina smartly managed to keep their very private holiday off the eyes of the media, but the secret was out when a rather enthusiastic fan posted pictures of the two having a good time in Ibiza. The two were even spotted attending a David Guetta concert a few days ago in Spain.




Hide 'n' seek
Reports about Ranbir and Katrina's proximity regularly kept appearing in the tabloids. Often her car would be spotted entering his bungalow on Pali Hill. At times, they were spotted at restaurants in and around Bandra. They even spent the New Year's eve together in New York in 2012. More recently, they came together for Karan Johar's birthday bash.

'Supportive' dad
At a time when there were constant reports about Ranbir's roving eye, his father, senior actor Rishi Kapoor, had evaded saying, "My son is like any other young boy. Abhi nahin karega toh kab karega?"

Together again
Post Rockstar (2011), Ranbir and Katrina got back together and decided to give their relationship one more chance. Of course, it was Katrina who took the lead because she couldn't get over Ranbir and was completely besotted with him.

Bonding time
Ranbir and Katrina got to know each other better as co-stars when they did their first film - Raj Kumar Santoshi's Ajab Prem Ki Ghazab Kahani (2009). At the time, Katrina was still with Salman Khan and Ranbir was with Deepika. So it can easily be assumed that Ranbir and Katrina had started meeting each other for official reasons sometime in the end of 2008. It would have to be that early as Santoshi is known to take long time to complete his films.



The split with Deepika
It's difficult to say with 100 per cent surety if Katrina was the sole reason why Deepika and Ranbir split. During media interactions of Ajab Prem Ki Ghazab Kahani, it was more than apparent that Katrina and Ranbir had gotten close. Reports had also surfaced that Deepika and Ranbir were having their fights. Deepika's grouse being that Ranbir was never around. They split sometime in 2010.

Twist in the story
After Ajab Prem... and Raajneeti surfaced stories about Ranbir-Katrina affair fizzling out. This was around the time Ranbir had started work on Rockstar in 2010 and rumours began circulating about his growing proximity with Nargis Fakhri. At the time, Ranbir was not sure of his equation with Katrina.

Tera hone laga hoon
Outdoor locations, faraway from Indian shores, are known to promote bonding between co-stars. Not surprisingly, Ranbir and Katrina shot major romantic songs like Tera hone laga hoon and Tu Jaane na in Turkey. Could the romance have first blossomed in the picturesque Turkish locales for Ajab Prem...?




Salman scare
When Ranbir started getting to know Katrina, he was not sure of how that would go down with Salman Khan, who was with Katrina for almost eight years. He probably feared the famous Salman temper. After Salman got wind of a budding romance between the two, he obviously wasn't too thrilled about it initially.

Poonam Pandey's leaked nude photo takes twitter by storm


Poonam Pandey's leaked photo
With still few days left before her debut film 'NASHA' hits silver screen on July 26, model turned actor Poonam Pandey has already taken twitter on storm by posting her latest picture. 

Days ago, the actor had claimed that her debut flick (NASHA) will be the sexiest movie of Bollywood industry and her latest post on twitter will force you to believe her claims. 

The photo showing her bare back in revealing thongs, has taken the social networking site by storm. Skin show of such kind is not new to Poonam but what appears rather amusing is the bold caption that reads-leaked!

Some followers termed it as a publicity stunt but it seems that her act has already given her the most-needed promotion before the release. 
@SourabhPool 

Had a bit of doubt regarding which movie to watch on the 26th,Wolverine or Nasha . All that doubt quashed by @iPoonampandey 's latest poster

Ranu @sauravranu 

@iPoonampandey very soon some ministers will get caught in the Parliament watching this pic ;)


@Pummybhatt 

@poonampandeyfc1 @ipoonampandey awesome figure ever in bollywood....u made us feel whole day abt u.....


@PubStunts 

Poonam Pandey's leaked nude photo: A publicity stunt?

@iamgunjangrunge 

@iPoonampandey you are amazingly beautiful !! #nasha is in my list and first day first show. ! Only to see YOU !! Wow I saw the pic ! Ummmmm

@Cool_sunny21 

Screw This Size Zero Figure.. This is what you called a perfect Figure..Woww can't take my Eyes Off @iPoonampandey 

@VikramAditya009 


After Nasha this will be the wax statue of @iPoonampandey in Museum of london

@sameerbadachi 

@iPoonampandey can ur pics be any hotter that indian Rupee also starts rising !!

@vikram_jam


@Gauravation @iPoonampandey @NashaFilm this is all a publicity stunt for her movie nasha...

ஜெயம்ரவி ஜோடியாகும் நயன்தாரா


ஜெயம் ரவியும், நயன்தாராவும் புதுப்படத்தில் ஜோடி சேர்கின்றனர். ஏற்கனவே விஜய், சூர்யா, விஷால், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பலருடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்போது முதல் தடவையாக ஜெயம் ரவியுடன் இணைகிறார். 


ஜெயம்ரவி ஜோடியாகும் நயன்தாரா


இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்குகிறார். இருவரும் ‘ஜெயம்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ போன்ற படங்களில் சேர்ந்து இருந்தனர். இப்போது மீண்டும் இணைகிறார்கள்.




நயன்தாரா தற்போது அஜீத் ஜோடியாகவும், ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்ததும் ஜெயம் ரவி படத்துக்கு வருகிறார். மெகா பட்ஜெட்டில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா ஆரோக்கியமாக வளர பெண்கள் சினிமாவுக்குள் நுழைய வேண்டும்: கௌதம் வாசுதேவ் மேனன்


வாரணம் ஆயிரம்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்த சதீஷ், நாயகனாக நடித்து வரும் படம் ‘என்றென்றும்’. இப்படத்தை சினிஸ் இயக்குகிறார். இவரே தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். நாயகியாக பிரியங்கா ரெட்டி நடித்துள்ளார்.

தமிழ் சினிமா ஆரோக்கியமாக வளர பெண்கள் சினிமாவுக்குள் நுழைய வேண்டும்: கௌதம் வாசுதேவ் மேனன்
இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் பி.எல்.தேனப்பன், பின்னணி பாடகர் நிகில் மேத்யூ, நடிகர் திலீப் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் ஆடியோவை கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட பி.எல்.தேனப்பன் பெற்றுக் கொண்டார்.

கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, இப்படத்தின் நாயகனான சதீஷ் திறமையான நடிகர். நான் இயக்கவிருந்த ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படம் ஏதோ சில காரணங்களால் கைவிடப்பட்டது. அந்த படத்தில் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படம் கைவிடப்பட்டபோது அவர் எந்த அளவிற்கு வேதனையடைந்தாரோ, அந்த அளவுக்கு நானும் வேதனையடைந்தேன். தமிழ் சினிமாவிற்கு தற்போது புதிய இளம் நடிகர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். முக்கியமாக பெண்கள் தமிழ் சினிமாவுக்கு வர முன்வரவேண்டும். அப்பொழுதுதான் சினிமா உலகம் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் புதிய இயக்குனர்களும் தமிழ் சினிமாவிற்கு வரவேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்... தயாரிப்பாளர்களின் நடிகர்' - சந்திரபிரகாஷ் ஜெயின்

விஜய் சினிமாத்தனமில்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர், என்று புகழ்ந்துள்ளார் தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின். 

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். 


சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்... தயாரிப்பாளர்களின் நடிகர்' - சந்திரபிரகாஷ் ஜெயின்
இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 9-ம் தேதி ‘தலைவா' படம் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார். 


அவர் கூறுகையில், "தலைவா' படம் சிறப்பாக வந்துள்ளது. காதல், காமெடி, அதிரடி ஆக்ஷன் என மெகா பொழுதுபோக்குப் படமாக தலைவா இருக்கும். 

மும்பையில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 

சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. விஜய் சினிமாத்தனம் இல்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். 


சிட்னியில் நிறைய பேரை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து சூட்டிங் நடத்தாமல் பணத்தை விரயம் செய்ததற்காக வருத்தப்பட்டார். ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.

சென்டர் ஃப்ரஷ் பிராண்ட் அம்பாசிடரான தனுஷ்

சென்னை: தனுஷ் சென்டர் ஃப்ரஷ் சூயிங் கம்மின் பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார். 

தனுஷின் ராஞ்ஹனா படம் அவரை வட இந்தியாவில் பிரபலமாக்கிவிட்டது. ஒரு படத்தில் நடித்தாலும் நடித்தால் வட இந்தியாவின் வான்டட் ரொமான்டிக் ஹீரோவாகிவிட்டார். 


இந்த படம் மூலம் தனுஷ், சோனம் கபூர் ஜோடி சூப்பர் ரீல் ஜோடியாகிவிட்டது. ராஞ்ஹனா முடித்த கையோடு தனுஷ், சோனம் கபூரை லக்ஸ் நிறுவனம் தங்களின் பிராண்ட் அம்பாசிடராக ஆக்கியது.

லக்ஸ் ஜோடி 


இனி லக்ஸ் விளம்பரத்தில் தனுஷும், சோனம் கபூரும் ஜோடியாக வருவதை பார்க்கலாம்.


சென்டர் ஃப்ரஷ் 


சென்டர் ஃப்ரஷ் சூயிங் கம் நிறுவனம் தனுஷை தனது பிராண்ட் அம்பாசிடராக ஆக்கியுள்ளது.


வெங்கட் பிரபு 


சென்டர் ஃப்ரஷ் விளம்பர படத்தை வெங்கட் பிரபு இயக்க தனுஷ் அதில் நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தில் வெங்கட் பிரபுவுடன் பணிபுரிந்தது இனிய அனுபவமாக இருந்ததாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்!

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என்ற தலைப்பில் தயாராகும் படத்தில் அருள்நிதி நடிக்கிறார். 

இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். அருள்நிதி இப்போது தகராறு என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதில் அவருக்கு பூர்ணா ஜோடியாக நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தை, 'கிளவுட் நைன் மூவிஸ்' தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார். 
அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்!
இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி', 'இரும்புக் கோட்டை முரட்டு சிக்கம்' படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் அருள்நிதி. 

வடிவேலு நடிக்க 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் அடுத்த இயக்க முடிவு செய்திருந்தார் சிம்புதேவன். 

ஆனால், இப்போதைக்கு அந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் அருள்நிதியை வைத்து இயக்குகிறார். 'ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 


இப்படத்தினை அருள்நிதியின் அப்பாவான மு.க.தமிழரசு தனது மேனகா மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.

சூர்யாவுக்கு 'தல-தளபதி'யில் யாரை பிடிக்கும்னு தெரியுமா?

சென்னை: தல, தளபதி இந்த இருவரில் யாரை பிடிக்கும் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் தனக்கு பிரச்சனை வராத பதிலை அளித்துள்ளார். 

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் சூர்யா படத்தை தன் தோளில் தாங்குகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

 ஊடகங்களும் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளன. இந்நிலையில் சூர்யா கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஹரியுடன் வந்த சூர்யாவிடம் மாணவிகள் பல்வேறு கேள்விகன் கேட்டனர்.


மாதவன் 

இந்தி படமான தோஸ்தானாவை தமிழில் ரீமேக் செய்தால் அதில் யாருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, சூர்யா சட்டென்று மாதவன் பெயரை தெரிவித்தார்.

தல-தளபதி தல, 

தளபதி ஆகியோரில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று மாணவிகள் கேட்க, வம்பே வேண்டாம் என்று நினைத்த சூர்யா இருவரையும் பிடிக்கும் என்று கூறி நைசாக நழுவிவிட்டார்.

அடுத்த படங்கள் 

சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும், லிங்குசாமியின் படத்திலும் நடிக்கிறார். இதில் துருவ நட்சத்திரம் படத்திற்கு நாயகி தேர்வு ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்துடன் நடிக்க அசின் மறுப்பு?

கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்துடன் நடிக்க அசின் மறுப்பு?


கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகி ஜெயிலில் இருந்தார். தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர் சினிமாவில் நடிக்கிறார். மலையாளத்தில் தயாராகும் பிக் பிக்கர் என்ற படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். காதல், காமெடி படமாக தயாராகிறது. இப் படத்தை பாலசந்திரகுமார் இயக்குகிறார்.

இதில் ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடக்கிறது. அசின் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கருதி அவரிடம் பேசியதாகவும், ஆனால் ஸ்ரீசாந்துடன் நடிக்க மாட்டேன் என அவர் மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்ரீசாந்துடன் பல வருடங்களுக்கு முன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகளை அவருடன் தொடர்பு படுத்தி செய்தி மற்றும் படங்கள் வந்தன. இதனால் அந்த நடிகைகள் மன உளைச்சலுக்கு ஆனார்கள். ஸ்ரீசாந்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பும் வெளியிட்டனர்.
இதுபோன்ற சர்ச்சைகள் வரும் என்பதாலேயே அசின் அவருடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு நடிகையை தேடுகிறார்கள்.

பருத்திவீரனுடன் மீண்டும் ஜோடி சேரணும்: ப்ரியாமணி ஆசை

சென்னை: ரஜினிகாந்த், கமல் ஹாஸனுடன் நடிக்க வேண்டும் என்று ப்ரியாமணி தனது ஆசையை தெரிவித்துள்ளார். 

ப்ரியாமணி பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் நடித்தார். அதில் அவர் முத்தழகாக அருமையாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். 

அவர் என்ன தான் தேசிய விருது பெற்றாலும் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால் கன்னடம், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். 


தற்போது அவர் 1 கன்னடப் படம், 2 தெலுங்கு மற்றும் 1 மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்

ஷாருக்கை பார்த்து வளர்ந்தவள் தான் ஷாருக்கான் படங்களை பார்த்து வளர்தவள் என்று ப்ரியாமணி தெரிவித்துள்ளார். அதனால் தான் அவரது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட அழைத்ததும் உடனே ஒத்துக் கொண்டாராம்.

ரஜினி, கமல் கூட ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனுடன் நடிக்க வேண்டும் என்று ப்ரியாமணி ஆசைப்படுகிறார்.



மறுபடியும் கார்த்தியுடன் தன்னுடைய பருத்திவீரன் நாயகன் கார்த்தியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.




சிம்பு, ஹன்சிகாவை மணந்தால் எனக்கு ஓகே தான்: டி.ஆர்.

சென்னை: தனது மகன் சிம்பு ஹன்சிகாவை மணந்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஆவலாக உள்ளனர். பெண் பார்க்கும் படலம் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது என்று கூறப்பட்டது. வேலூரில் ஒரு பெண்ணை பார்த்து பிடித்துவிட்டதாகவெல்லாம் கூறினார்கள். 

அதன் பிறகு சிம்பு ஆன்மீகத்தில் குதித்துவிட்டார். சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் என்று யார் பத்தவச்சாங்களோ தெரியவில்லை. அதை சம்பந்தப்பட்டவர்களே மறுத்தாலும் மீண்டும் மீண்டும் ரவுண்டு வருகிறது.


ஹன்சிகா




தனக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை என்று ஹன்சிகா பலமுறை கதறிவிட்டார். ஆனாலும் அவர் பெயர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் வாலு படத்தில் நடிக்கையில் காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.

டி.ராஜேந்தர்



 தனது மகன் சிம்பு யாரை காதலித்து மணந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என்று டி.ராஜேந்தர் கூறி வந்தார். இந்நிலையில் சிம்பு ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டாலும் அதை தான் ஏற்றுக்கொள்வேன் என்று டி.ஆர். தெரிவித்துள்ளார்.


பாவங்க ஹன்சிகா 



ஹன்சிகா தான் அய்யா சாமி ஆள விட்டுவிடுங்கள் என்று அழுகாத குறையாக சொல்கிறார் அல்லவா. பாவம், அவரை விட்டுவிடுங்களேன்.

பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திக்கேயன்

நான் பாடப்போறேன்.... 

பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன். 

"ஊரைக் காக்க உண்டான சங்கம்... 

உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை...

இது இல்லை.... 

நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை"..... 

இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல்.

யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் செம ஹிட் அடித்துள்ளதாம். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான சிவகார்த்திக்கேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். 
பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திக்கேயன்  

தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் போன்ற படங்களில் நடித்து ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார். 

சிவகார்த்திக்கேயனின் காமெடி கலந்த நடிப்பு இளம் ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இந்த படத்தில் அவருடன் சத்யராஜும் நடிக்கிறார். அவருக்கு ஜோடி பிந்து மாதவி. இந்தப்படத்தின் இசையமைப்பாளர் இமான், முதன் முறையாக சிவகார்த்திக்கேயனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார். 

கிராமிய மனம் கமழும் இந்தப்பாடல் இப்போது யுடியூப் ஹிட் ஆகியுள்ளது. 

சினிமாவில் பின்னணி பாடிய அனுபவம் குறித்து பேசிய சிவகார்த்திக்கேயன், பள்ளி நாட்களில் நான் பாடும் போது என் குரலை கேட்டு நானே பயந்து இருக்கிறேன். 

இப்போது இமான் என்னிடம் பாடக் கேட்ட போது கூட அதைக் கூறி முதலில் மறுத்தேன். ஆனால் அவர் முயற்சி செய்யுங்கள் நன்றாக வரும் என்று ஊக்கப்படுத்தினார். 

அப்போது நான் கிராமிய பாடகர் அந்தோணிதாசன் பாடிய காசு பணம் துட்டு பாடலை மனதில் வைத்துக் கொண்டு பாட முயற்சி செய்தேன். இமான் கொடுத்த ஊக்கத்தால் சிறப்பாக பாட முடிந்தது என்றார். 


எப்படியோ ரஜினி, கமல்,விஜய், சிம்பு, தனுஷ் வரிசையில் நடிகராக இருந்து பாடகராகிவிட்டார் சிவகார்த்திக்கேயன். 


அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பறவை என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகும் கூட இன்னமும் அதன் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. 

முதலில் இந்தப் படத்துக்கு வலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் மறுத்தார். 

எனவே தொடர்ந்து அஜீத் 53 என்றே இந்தப் படத்தைக் குறிப்பிட்டு வந்தனர் மீடியாவில். இதோ அதோ என தலைப்பு சூடும் படலம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 

இந்த நிலையில் பறவை என அந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னமும் அதனை விஷ்ணுவர்தன் தரப்பு உறுதி செய்யவில்லை. 


இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா - டாப்ஸி இன்னொரு ஜோடி. 

சந்தானமும் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பா விஜய் 5 பாடல்களை எழுதியுள்ளார்.