பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்தி படத்தில் ஒருபாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார்.
பிரியாமணி கன்னடத்தில் நடித்த சாருலதா படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் கடைசியாக நடித்த படம் இதுதான்.
ஹன்சிகா, டாப்சி, சமந்தா போன்றோர் வருகையால் பிரியாமணிக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. கார்த்தி, விஷால், தனுஷ் போன்றோருடன் ஜோடி சேர்ந்துள்ள இவர், ரஜினியுடனும் நடிக்க ஆசை உள்ளதாம்.
இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:–
சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. கமலஹாசனுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நான் ஷாருக்கான் ரசிகை. சிறு வயதில் அவரது படங்களை பார்த்து வளர்ந்தேன். எனவேதான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட அழைத்ததும் ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.
No comments:
Post a Comment