Tuesday, 16 July 2013

தலைப்பில் என் பெயரும் வேண்டாம், பில்டப்பும் வேண்டாம்: அஜீத் அதிரடி உத்தரவு

சென்னை: அஜீத் குமார் தனது படத் தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு தெரிவித்துள்ளார். 

அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 


ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர். இந்நிலையில் அஜீத் படத்திற்கு புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பறவை 


அஜீத் படத்தின் தலைப்பு வலை இல்லை பறவை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தலைப்பையும் யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை.

சீக்கிரமாக தலைப்பை சொல்லுங்க 

விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை. தலைப்பை அறிவிப்பேனா என்று அடம்பிடிக்கிறார்களே.

பில்டப் வேண்டாம் 

தனது கதாபாத்திரத்தின் பெயரையோ அல்லது பில்டப் கொடுக்கும் தலைப்பையோ தனது படத்தின் தலைப்பாக வைக்கவே கூடாது என்று அஜீத் குமார் இயக்குனர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.

நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரும் வழக்கு வாபஸ்


நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரும் வழக்கு வாபஸ்
நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை மனுதாரரே வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அதை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த எஸ்.பாரதிதேவி (வயது 42) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அஞ்சலி என்கிற பாலா என்கிற திரிபுரசுந்தரி (வயது 27), எனது சகோதரி பார்வதிதேவியின் மகள். அஞ்சலியை நான் தத்து மகளாக எடுத்துக்கொண்டேன். இதற்கான நடைமுறைகளை கோடம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்திருக்கிறேன்.
அஞ்சலி நடிகையாக இருக்கிறாள். சத்தமின்றி முத்தமிடு என்ற படம் அஞ்சலியின் முதல் சினிமாவாகும். இதன்பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் அஞ்சலி நடித்து வந்தார். தற்போது பலுப்பு என்ற தெலுங்கு படத்தில் அவர் நடிக்கிறார். இதற்காக அவர் கடந்த மார்ச் 31-ந்தேதி எனது கணவருடன் ஐதராபாத் சென்றிருந்தார். 

அங்கு தாஸ் பல்லவா என்ற ஓட்டலில் இரண்டு பேரும் அறை எடுத்துத் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி காலையில் என் கணவர் கண்விழித்து பார்த்தபோது, அஞ்சலியைக் காணவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

நான் வளசரவாக்கம் போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் ஏப்ரல் 10-ந்தேதி புகார் கொடுத்தேன். இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சலியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன். அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அஞ்சலி தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், வக்கீல் முகுந்தன் ஆஜரானார்கள். அரசுத்தரப்பில் வக்கீல் தம்பிதுரை ஆஜரானார்.

ஏற்கனவே பெங்களூரில் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே அவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூற முடியாது என்று தம்பிதுரை வாதிட்டார். 

அஞ்சலி தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், "அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இங்கு வழங்கு தாக்கல் செய்துவிட்டு, அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மற்றொரு மனுவை வேறு கோர்ட்டில் பாரதிதேவி தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்க முடியாது" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு தவறான மனுவாக இருந்துவிடக்கூடாது என்று கருத்து கூறினர். அதைத் தொடர்ந்து அந்த ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக பாரதிதேவி தரப்பில் கூறப்பட்டது. எனவே மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விஜய்யுடன் காமெடியில் இணையும் வித்யு ராமன்


விஜய்யுடன் காமெடியில் இணையும் வித்யு ராமன்
நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்திருப்பவர் வித்யு ராமன். இவர் அப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திலும் சந்தானத்தின் காதலியாக நடித்து காமெடியில் ரசிக்க வைத்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஜில்லா’ படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்திலும் வித்யு ராமன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியுடன் நடிக்க ஆசை: பிரியாமணி


ரஜினியுடன் நடிக்க ஆசை: பிரியாமணி
பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்தி படத்தில் ஒருபாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார்.

பிரியாமணி கன்னடத்தில் நடித்த சாருலதா படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் கடைசியாக நடித்த படம் இதுதான்.

ஹன்சிகா, டாப்சி, சமந்தா போன்றோர் வருகையால் பிரியாமணிக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. கார்த்தி, விஷால், தனுஷ் போன்றோருடன் ஜோடி சேர்ந்துள்ள இவர், ரஜினியுடனும் நடிக்க ஆசை உள்ளதாம்.

இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:–

சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. கமலஹாசனுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நான் ஷாருக்கான் ரசிகை. சிறு வயதில் அவரது படங்களை பார்த்து வளர்ந்தேன். எனவேதான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட அழைத்ததும் ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.

சிம்புவுடன் காதல் இல்லை: ஹன்சிகா


சிம்புவுடன் காதல் இல்லை: ஹன்சிகா

ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன.
இருவரும் வேட்டை, மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரிடம் இதுகுறித்து கேட்டபோது ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்து கொள்ள விரும்புகினால் எதிர்க்கமாட்டேன் என கூறி இருந்தார். 

இந்த செய்தியை தெலுங்கு டி.வி.சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின.
இதையடுத்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். ஐதராபாத்தில் அவர் ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–

சிம்புவுன் நானும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகளால் நான் வருத்தம் அடைந்துள்ளேன். எங்களுக்குள் காதல் இல்லை. நண்பர்களாத்தான் பழகுகிறோம்.
இரண்டு படங்களில் சேர்ந்து நடித்ததால் காதல் என்று வதந்தி பரப்பி உள்ளனர். 

என்னுடன் நடித்த மற்ற கதாநாயகர்களுடன் நான் எப்படி பழகுகிறோனோ. அப்படித்தான் சிம்புடனும் பழங்குகிறேன்.

சிம்புவை மணக்கப்போவதாக வெளியான செய்தியால் என்னை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கவலை அடைந்துள்ளனர். நான் இப்போது திருமணம் செய்து கொள்ளமாட்டேன். அதற்கு நிறைய காலம் இருக்கிறது.
எனது திருமணம் குடும்பத்தினர் விருப்பப் படித்தான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன்.

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

தமிழில் ஹன்சிகா நம்பர் ஒன் நடிகையாகி உள்ளார். நிறைய படங்கள் குவிகிறது. சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான சிங்கம்–2, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள் ஹிட்டாகியுள்ளன.

விஜய்யின் தலைவா எப்போது ரிலீஸ்?


விஜய்யின் தலைவா எப்போது ரிலீஸ்?

விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ரிலீஸ் தேதி மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. 

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் ரம்ஜான் ஸ்பெஷலாக படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்க சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ள படம் தலைவா. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. 

ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியவில்லை. 

டால்பி அட்மாஸ் தொழில்நுட்பப் பணிகள் இரப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும், சென்சார் சான்று பெற வேண்டியிருப்பதாலும் மேலும் ஒரு வாரம் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளதாக இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிதாக விளம்பரமில்லாமல் ரிலீசாகும் தனுஷின் மரியான்!


பெரிதாக விளம்பரமில்லாமல் ரிலீசாகும் தனுஷின் மரியான்!

இந்த மாதம் வெளியாகவிருக்கிற முக்கிய படங்களுள் ஒன்று தனுஷின் மரியான். 

இந்த மாதத்தின் முதல்வாரத்தில் வெளியான சிங்கம் 2 பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியின் காரணமாக, தொடர்ந்து வெளியாக வேண்டிய சில படங்கள் தள்ளிப் போய்விட்டன. 

எனவே இந்த வாரம் முழுவதும் எந்த போட்டியும் இல்லாமல் கல்லா கட்டிக் கொண்டிருக்கப் போகிறது சிங்கம் 2. இதற்கிடையில் இந்த வாரமா அடுத்த வாரமா என ஊசலாடிக் கொண்டிருந்த தனுஷின் மரியான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. 

வரும் ஜூலை 19.. அதாவது இந்த வெள்ளிக் கிழமை மரியான் உலகமெங்கும் வெளியாகவது தியேட்டர் லிஸ்டுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "மரியான் படம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. 

ஆனால் மிக அருமையான விஷுவல்ஸுக்கு உத்தரவாதம் தருவேன். ரசிகர்களுக்கு மிகவும் புதிய அனுபவமாக இந்தப் படம் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னும் மூன்று தினங்களில் 


வெளியாகவிருக்கும் படத்துக்கு பெரிதாக எந்த விளம்பரமும் இல்லாதது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.